அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்? ஓபிஎஸ், டிடிவி கூட்டணி குறித்துச் செங்கோட்டையன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிமுக மற்றும் ஓபிஎஸ்-டிடிவி கூட்டணி குறித்த பல அதிரடி தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) தனது ஆதரவாளர்களுடன் கடந்த டிசம்பர் 23ம் தேதி நடத்திய ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணையப் போவதில்லை என்பதில் ஓபிஎஸ் உறுதியாக உள்ளார்" என்று குறிப்பிட்ட அவர், ஓபிஎஸ் விரைவில் தகுந்த கூட்டணி குறித்து நல்ல முடிவை அறிவிப்பார் என்றார். இதன் மூலம் தவெக - ஓபிஎஸ் - டிடிவி ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாகியுள்ளன.

தவெக - காங்கிரஸ் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், தற்போதைக்கு அதுபோன்ற எவ்வித கருத்தும் தவெக-விடம் இல்லை என்றார். "நாங்கள் இணைய வேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் இணைவோம்" என்று சூசகமாகப் பதிலளித்தார். அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் யாராவது விஜய் தலைமையிலான தவெக-விற்கு வருவார்களா என்ற கேள்விக்கு, "நிச்சயமாக வருவார்கள்" என்று செங்கோட்டையன் அதிரடியாகப் பதிலளித்தார். இது அதிமுக தலைமைக்கு ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

"நாங்கள் பாஜகவை கொள்கை ரீதியாகவே எதிர்க்கிறோம் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்" என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், வரும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழக அரசியலில் நாடு வியக்கும் வகையில் பெரிய மாற்றங்கள் மற்றும் நல்ல முடிவுகள் வெளியாகும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
