துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி கைது... பெரும் பரபரப்பு!

 
கோபி

கோபிசெட்டிபாளையம் அருகே ஆண்டவர்மலையைச் சேர்ந்த கோபிநாத், ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச் செயலாளராக உள்ளார். விவசாயியான அவர், பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கியை வைத்திருந்தார். கடந்த சில நாட்களாக மது போதைக்கு அடிமையாகி மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

நேற்றிரவு வழக்கம்போல் போதையில் தகராறு செய்ததைத் தொடர்ந்து, மனைவி தனது தந்தை வேலுச்சாமி மற்றும் தம்பி தினேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து அறிவுரை கூறியபோது கோபிநாத் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து மாமனார் மற்றும் மைத்துனரை மிரட்டினார்.

பின்னர் வானத்தை நோக்கி 3 முறை சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தினேஷ்குமார் நந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நள்ளிரவில் கோபிநாத்தை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!