பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்…!

 
எடப்பாடி
 

 

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அ.தி.மு.க. தீவிர தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பின்னணியில், அ.தி.மு.க. செயற்குழு–பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அருகே வானகரத்தில் நடைபெறுகிறது.

'பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு'... மே 23ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதற்காக வாகன நிறுத்தம், உணவு அருந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் தனித்தனியாக செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாகிகளுக்கு சைவம், அசைவம் என இருவகை உணவும் வழங்கப்படுகிறது.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

சட்டசபை தேர்தல் நெருங்கும் தருணத்தில் நடைபெறும் இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விவகாரம், தேர்தல் வியூகம், மக்கள் சந்திப்பு, பூத் கமிட்டி பணிகள் உள்ளிட்ட பல முக்கிய விவாதங்கள் இந்தப் பொதுக்குழுவில் நடைபெற உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!