அதிமுக பொதுக்குழு செல்லும்... எகிறி அடித்த எடப்பாடி.. கதறிய ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்!

                                                                                                                                            - ‘ப்ரீத்தி’ கார்த்திக்

 
எடப்பாடி

அரசனை நம்பி... என்றொரு பழமொழி உண்டு. இதைத் தான் இப்போது ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் சொல்லி புலம்பி வருகின்றனர். அதிமுகவின் சட்டவிதிகளின்படி கட்சித் தொண்டர்களால் தேர்தெடுக்கப்படும் பொதுச் செயலாளரே பெரிய பதவி. அவரே தலைமையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாவதுடன் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களுக்கு A மற்றும் B ஃபார்ம்களில் கையெழுத்து இடும் அதிகாரம் படைத்தவராக இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி என இரு தரப்பும் தாங்கள் தான் கட்சி என அடித்துக் கொண்ட காரணத்தினால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது, அப்படி1988ல் அதிமுகவில் என்ன தான் நடந்தது? அந்த பிரச்னை எப்படி முடிவுக்கு வந்தது?

ஜெயலலிதா

1987ம் ஆண்டு டிசம்பர் 24ல் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் இறந்தார். தலைவர் இறந்ததும் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. ஆனால், விடை தான் தொண்டர்கள் விரும்பியது போல அத்தனை எளிமையாக  அமையவில்லை. ஏறக்குறைய குடுமிப்பிடி சண்டையாகவே இருந்தது. தேர்தலில் ஜானகி அணி தோல்வி முகம் காணவே ஜெயலலிதாவின் கை ஓங்கியது. இன்றைக்கு பல கட்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருந்தனர். ஜானகியம்மாவும் விட்டுக் கொடுக்க மீண்டும் இலை துளிர்த்தது.

எப்படி எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அதிமுக உடைந்ததோ அதே போல ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னும் அதே நிலை தொடர, பொதுச்செயலாளர் பதவி யாருக்கும் வேண்டாம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என பிரித்துக் கொண்டார்கள். பின்னர் இருவருக்கும் சரிவராத காரணத்தால் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில், பாட்டில் வீசப்பட்டு அவமரியாதைப்படுத்தப்பட்ட நிலையில் வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளுக்கிடையில் அதிகார  போட்டி இருப்பது வெளிப்படையாக தெரிய வந்தது. மீண்டும் இரட்டை இலை தலைமைக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி இருந்தது. சிக்கலான பெரும் பிரச்சனை நீதிமன்றம் போனது. ஜெயலலிதா எப்படி ஒற்றைத் தலைமையாக உருவானாரோ அதே போல இப்பொழுது எடப்பாடி வசம் கட்சி சென்றிருக்கிறது.

ஈரோடு

வரலாறு திரும்பும் போது இரண்டாம் முறை கேலிக் கூத்தாக இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில்  தற்போது, அதிமுகவில் நடக்கும் ஒற்றைத் தலைமை விவகாரத்தால், 1988ன் வரலாறு திரும்புகிறது என்று தான் பார்க்கப்படுகிறது.  ஜீலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் எனக் கூறி ஓ.பி.எஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்சநீதி மன்றம். ஆகவே கட்சியின் முழுக்கட்டுப்பாடும் எடப்பாடி கைக்கு வருவது உறுதியாகி விட்டது. தேர்தல் நடந்தால் இந்த தீர்ப்பின் தாக்கம் ஈரோடு கிழக்கில் வெற்றிக்கு கை கொடுக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web