டிசம்பர் 10ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 10ம் தேதியன்று நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
