“எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத கட்சி அதிமுக!” ... சி.வி. சண்முகம் ஆவேச முழக்கம்!

 
சண்முகம்
 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு, நிர்வாகக் குழு கூட்டத்தில் ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாக உரையாற்றினார். தொண்டர்களால் உருவானது, தொண்டர்களுக்காக இயங்குவது அதிமுக என்றார். நான் வெளியேறுவேன் என்று பேசினார்கள்; என் உயிர் இருக்கும் வரை அதிமுகவில்தான் இருப்பேன் என்று உறுதியளித்தார்.

வளர்

கட்சிக்குள் பிளவு பேசுவோரை கடுமையாகச் சாடினார். திமுக மட்டும் எதிரி அல்ல; நம்மோடு இருந்து நம்மைக் கெடுப்பவர்களை கவனிக்க வேண்டும் என்றார். அரசியல் புரோக்கர்கள், துரோகிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொண்டர்களை எச்சரித்தார். அதிகாரம், பண பலத்தை மீறி அதிமுகவை நிலைநிறுத்தியது எடப்பாடி பழனிசாமி என்றார்.

எடப்பாடி

இன்னும் தேர்தலுக்கு 100 நாட்கள்தான் என்று கூறி திமுக ஆட்சிக்கு கவுன்டவுன் தொடங்கிவிட்டது என முழங்கினார். திமுக ஊழல், வாக்குறுதி மீறல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்ய வலியுறுத்தினார். எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்ற அவரது வார்த்தைகள் தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின. 2026 தேர்தலை நோக்கிய போர்க்குரல் இந்த கூட்டத்தில் தெளிவாக ஒலித்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!