அதிமுக ஐடிவிங் நிர்வாகி பிரசாத்திடம் காவலில் எடுத்து விசாரணை!

சென்னை நுங்கம்பாக்கம் மதுபான கூடத்தில் நடந்த தகராறு தொடர்பாக அதிமுக ஐடி விங் நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், அதிமுகவை சேர்ந்த அஜய் வாண்டையார், பரமக்குடி ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி பிரசாத் மீது மேலும் வழக்குகள் குவிந்தன.
பப்பில் தகராறு செய்த விவகாரத்தில் 3 வழக்குகளும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடிக்கு 2 2 வழக்குகள் என ஏற்கனவே 5 வழக்குகள் பிரசாத் மீது பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு போதைபொருளை விற்பனை செய்தது அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் தான் என்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்துக்கு பிரசாத் 8 முறை போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!