அதிமுக ஐடி விங் தொழிலதிபர் தவெகவில் இணைப்பு!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நிர்வாகிகள் இடமாற்றம் அதிகரித்து வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் கட்சி மாறுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவையில் அதிமுக சமூக வலைதளப் பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்த தொழிலதிபர் KPR. சதீஷ், திடீரென அதிமுகவில் இருந்து விலகினார். நேற்று ஜனவரி 5-ம் தேதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் அவரை நேரில் சந்தித்து வரவேற்றார்.
கோவை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பலமாக கருதப்பட்ட ஒருவர் இவ்வாறு விலகி விஜய்யுடன் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய்யின் அரசியல் கொள்கைகள் பிடித்ததால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவையில் தமிழக வெற்றிக் கழகம் மேலும் வலுப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
