பரபரப்பு... பள்ளி மாணவிக்கு மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் தலைமறைவு!

 
சூர்யா
 

சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமி சாலையில்  நடந்து சென்ற பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து  கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அத்துடன் கன்னத்தில் அறைந்து காதலிக்கச் சொல்லியும் கட்டாயப்படுத்தியுள்ளார்.  நடுரோட்டில் மாணவியை தலைமுடியை பிடித்து இழுத்து தன்னை காதலிக்கவில்லை என்றால் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் எனக் மிரட்டியுள்ளார். அந்த பக்கமாக சென்றுகொண்டிருந்தவர்கள் இதனை பார்த்து அவரை பிடிக்க  முயற்சித்தபோது  தப்பி ஓடி விட்டனர்.

கணவன் மனைவி சண்டை

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ராயப்பேட்டையைச் சேர்ந்த சூர்யாயும் அவரது கூட்டாளியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சூர்யா அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை 118வது வட்டச் செயலாளர் என்பது தெரியவந்தது. அவர் மீது போக்சோ, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ்  அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடி வருகின்றனர்.   

போலீஸ்
ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில்  ஐஸ் ஹவுஸ் போலீசாரால்  கைது செய்யப்பட்டு சூர்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .  சிறையில் இருந்து வெளிவந்த பின் தொடர்ந்து மது பாட்டில்கள் விற்பனை மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது  மாமாவும் ரவுடியுமான அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல், உணவகங்களில் இலவச பிரியாணி கேட்டு மிரட்டல் விடுத்து வந்தது உட்பட  பல்வேறு குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது