எங்களுக்கும் பேச வாய்ப்பு கொடுங்க... கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள்!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறை சார்பாகவும் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனிடையே நேற்று டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக்_ஊழல் பின்னணியில் உள்ள #அந்த_தியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பேச முயன்ற போது அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் அதிமுகவினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!