அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்…. சபாநாயகர் உத்தரவு!

 
சட்டசபை

 
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில்  டாஸ்மாக்கில் காவலர்  கொலை செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என இபிஎஸ்   கவன ஈர்ப்பு தீர்மானத்தை  கொண்டு வந்தார். ஆனால் இன்று அந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என சபாநாயகர் கூறினார்.  முன்னறிவிப்பு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி பேச அனுமதி கோரிய நிலையில் அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். 

சட்டசபை

இதனால் இருக்கையில் இருந்து எழுந்து தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனவே அவை மரபுகளை கடைப்பிடித்து அமைதியாக இருங்கள் என முதல்வர் ஸ்டாலினும் எடுத்துக் கூறினார். 

சட்டசபை

இருந்தபோதிலும் அதிமுகவினர்  தொடர்ந்து அமளியில்  ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேறும்படி  சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதாவது சபாநாயகரின் இருக்கை அருகே சென்று அவர்கள் முழக்கமிட்டதால் வெளியேற்றும்படி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மேலும் தற்போது அதிமுக எம்எல்ஏக்களை இன்று ஒரு நாள் மட்டும் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?