அதிமுக–பாமக கூட்டணி உறுதி… பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

 
அன்புமணி
 

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். வரும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாமக இதுவரை கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காததால், இந்த பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.

அன்புமணி ராமதாஸ்

சந்திப்புக்குப் பிறகு இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடும் என உறுதியாக அறிவித்தார். இது இயற்கையான கூட்டணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பால், தேர்தல் களத்தில் அதிமுக–பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதியானதாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!