2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் ... சசிகலா உறுதி!

 
உடைகிறதா அதிமுக?! சசிகலா மீது ஆர்பி உதயகுமார்  கடும் தாக்கு!


 


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா.  இவர் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டார்.  

சசிகலா

கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு வருகை தந்த அவர் குபேரலிங்க கருவறை அர்த்தமண்டபத்திற்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர்களிடம் நின்று செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

`சசிகலா

செய்தியாளர்களிடம் பேசிய  சசிகலா, “ 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தற்போது தி.மு.க. அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்று ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. இதனை யாராலும் மறுக்க முடியாது. மீதம் உள்ள ஆட்சி காலத்தை நடத்துவதற்காக தி.மு.க. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இதனை பிரச்சார யுக்தியாக செய்து வருகிறது.” என கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web