நவம்பர் 25ம் தேதி அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 
இபிஎஸ்
 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாவது, திருப்பூரில் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி (செவ்வாய்) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நிலையை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சரியாக கையாளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதையும் கண்டித்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு, திருப்பூர் குமரன் சிலை அருகே நடைபெறும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அதிகளவில் கலந்து கொண்டு வாக்குச் சாவடி மற்றும் நகராட்சி செயல்பாடுகளில் ஏற்பட்ட குறைகளை எதிர்த்து தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!