ஜனவரி 4ம் தேதி நாமக்கலில் அதிமுக மாபெரும் போராட்டம்!

 
அதிமுக

 

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காவிரி குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிடப்பில் போட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை பாலம் அமைக்கும் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனவரி 4, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையம் மல்லிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்குவார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!