ஏப்ரல் 7ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்! மாஸ் காட்டும் எடப்பாடி!

 
எடப்பாடி

சனிப்பெயர்ச்சி யாருக்கு தோதாக இருக்கிறதோ இல்லையோ எடப்பாடிக்கு சாதகமாக இருக்கிறது. கூடவே சுக்ர திசையும் எடப்பாடி பக்கம் இருப்பதைப் போல தான் அரசியல் நகர்வுகள் செல்கின்றன. நீதிமன்றத்தில் ஓபிஎஸ் எவ்வளவு முட்டுக்கொடுத்தும் அதிமுகவும், இரட்டை இலையும் எந்த பங்கமும் இல்லாமல் முழுசாக எடப்பாடியின் கைகளுக்கு செல்லும் நிலையிலேயே தற்போதைய போக்கு அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இம்மாதம் 7ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்து, அழைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

இரட்டை தலைமை தொடருமா..? இன்று கூடும் அ.தி.மு.க செயற்குழு கூட்டம்..!!

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில், ஏப்ரல் 7ம் தேதி மதியம் 12 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் நடக்கிறது.

இபிஎஸ்

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களான தலைமையக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வெளிமாநில செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல் ஏக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் (பெண்கள்) எல்லாரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே 7ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமையக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web