2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி... விதவிதமான கார்களில் வலம் வரும் இபிஎஸ்!

 
இபிஎஸ்

 தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் நேற்று உள்துறை அமித்ஷாவை  நேரில் சந்தித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்  சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசர அவசரமாக திடீர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் டெல்லி பயணம் மேற்கொண்டனர்.

இபிஎஸ்

அதிமுக கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு சமீபத்தில்  திறக்கப்பட்டது. அதனை காணவே எடப்பாடியார் டெல்லி சென்றதாக  அதிமுகவினர் கூறி வந்தாலும், யாரும் பாஜக தலைவர்களை சந்திக்க இபிஎஸ் சென்றுள்ளார் என்ற கூற்றை முற்றிலுமாக மறுக்கவில்லை. இதனை முதல்வர்  ஸ்டாலினே சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.  எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் முக்கிய நபர்களை சந்திக்க செல்கிறார். அவர்களிடம் இருமொழி கொள்கை பற்றி கூறுங்கள் என மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலுக்கு நடுவே நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி  கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகிய முன்னாள் அதிமுக அமைச்சர்களும், அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை ஆகியோரும் சந்தித்துள்ளனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்த நிலையில் அதன் பிறகு தமிழக பாஜகவினர் – அதிமுக இடையேயான பல்வேறு கருத்து மோதல்கள் உருவாகின.   2024 நடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தான், தற்போதைய இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சென்றிருக்கலாம் என பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில்  பேசப்பட்டு வருகிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி , நான் கட்சி அலுவலகம் பார்க்க தான் வந்தேன் என கூறி மழுப்பினாலும், அமித்ஷா இந்த சந்திப்புக்கு பிறகு  “தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் ” என கூட்டணி சந்திப்பு பேச்சுக்களை இன்னும் பலப்படுத்தினார்.

 
டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிமுக கட்சி அலுவலகத்திற்கு இன்னோவாவில் பயணித்த இபிஎஸ்  கட்சி அலுவலகத்தில் இருந்து ஆடி காரில் சென்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு வேறு ஒரு காரில் பயணம் செய்ததாகவும் செய்திகள் உலா வருகின்றன. வழக்கமான நேரடி சந்திப்பு தான் என்றால் எதற்காக இந்த கார் விளையாட்டு எனவும் அரசியல் வட்டாரத்தில் முணுமுணுப்பு தொடங்கியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?