விஜய் பாணியில் மாணவர்களுக்கு உதவித் தொகை!! ரஜினி ரசிகர்கள் அதிரடி சரவெடி!!

 
ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு தற்போது   நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’.  கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இவர்களுடன்  மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன்  என பல முண்ணனி நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.  
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்   அனிருத் இசையமைப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில்   முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.   அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படம்,  ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயிலர்
 ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல்வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை. இதனையடுத்து இந்தப் படத்திலிருந்து ஹுக்கும் என்ற பாடல் இன்று ஜூலை 17 வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக ஆக்குவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த் மாவட்ட வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஜெயிலர்
இந்த கூட்டத்தில் மாநகரம், நகரம், ஒன்றியம் உட்பட மாவட்ட முழுவதும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயிலர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக ஆக்க ரசிகர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. படம் திரையிடப்படும் ஆகஸ்ட் 10ம் தேதி தூத்துக்குடி மாநகர முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.மேலும் ஜெயிலர் படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கும் வகையில் ரூபாய் 4.5  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி ஜெயபால் லட்சுமணன் கண்ணன் மாநகர செயலாளர் வெலிங்டன் மாவட்ட மீனவர் அணி அருள் ஆனந்த்  உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்