சென்னை - டெல்லி ஏர் இந்தியா விமானங்கள் 2 சேவை ரத்து... பயணிகள் கடும் அவதி!

 
ஏர் இந்தியா

சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமான சேவை நேற்று திடீரென எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஏர் இந்தியா விமானம் தொடர்ந்து தனது சேவையில் குளறுபடி செய்து வரும் நிலையில் நேற்று மீண்டும் சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

முன்னதாக கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ஜூன் 18ம் தேதி புதன்கிழமை டெல்லியில் இருந்து 4.15 மணிக்கு சென்னைக்கு புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா

அதேபோல நேற்றிரவு சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு டெல்லிக்கு புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விமானப் பயணம் குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமானக் கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா

முன்னதாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டது. சௌதி அரேபியா தம்மமில் இருந்து வரும் விமானம் தாமதமாக வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது