ஏர் இந்தியா விபத்து மனதை உடைக்கிறது... ராகுல் காந்தி வருத்தம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதிகளின் மேலே விழுந்து தீப்பற்றி எரிந்தது.விண்ணை முட்டும் அளவுக்கு அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கோர விமான விபத்தில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்தனர்.
The Ahmedabad Air India crash is heartbreaking.
— Rahul Gandhi (@RahulGandhi) June 12, 2025
The pain and anxiety the families of the passengers and crew must be feeling is unimaginable. My thoughts are with each one of them in this incredibly difficult moment.
Urgent rescue and relief efforts by the administration are…
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 133 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் ”அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து மனதை உடைக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் என்னால் யோசிக்க கூட முடியவில்லை அந்த அளவுக்கு பதட்டமாக இருக்கிறது. நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை – ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!