ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சி... கொந்தளிக்கும் பயணிகள்!
ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து குளறுபடிகள் நடந்து வருவதாக பயணிகள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். சுமார் 5 மணி நேர பயணத்தில் ஏஸி வேலை செய்யவே இல்லை என்று புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம் சில நிமிடங்களிலேயே அகமதாபாத், மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 274 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் கடந்த இரு தினங்களாக ஒரு சில விமானங்களில் அசெளர்கயம் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் ஒருவித அச்சத்திற்கு ஆளாகினர்
This isn’t Air India — it’s worse than a roadways bus.
— Kuldeep S Dhillon (@kdeep39) June 16, 2025
What’s going on? Is this a joke or national disgrace?
✈️ Flight IX196 (Dubai to Jaipur):
🚫 No AC for 5 HOURS
🚫 No announcements
🚫 No crew assistance
Passengers sat sweating in what felt like a **flying tin oven.**
Not a… pic.twitter.com/UfqRBjrPfu
ஹஜ் பயணிகளுடன் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து லக்னோ விமான நிலையத்திற்கு வந்த விமானம், தரையிறங்கியபோது இடதுபுற சக்கரத்தில் புகை வந்தது. Landing Gear-ன் ஹைட்ராலிக் ஆயில் கசிந்ததால் புகை என தகவல் வெளியானதை அடுத்து பழுது சரிசெய்யப்பட்டு, சௌதியா ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் ஜெடாவிற்கு புறப்பட்டு சென்றது.
லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட British Airways-ன் BOEING 787 விமானம், லண்டனில் அவசர அவசரமாக தரையிறக்கம்; விமானத்தில் Flap Adjustment Failure ஏற்பட்டதால், நடுவானில் எரிபொருளை வெளியேற்றிவிட்டு விமானம் தரையிறக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் - துபாய் ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி. செயலிழப்பால் பயணிகள் அவதி; 5 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் வியர்வையில் நனைந்திருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் ஹாங்காங் திரும்பியது. பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்ட நிலையில், அதிகாரிகள் விமானத்தில் ஆய்வு செய்து, சரி செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
