சிங்கப்பூர், டெல்லி செல்லும் 6 ஏர் இந்தியா விமானங்கள் திடீர் தாமதம்… சென்னையில் பயணிகள் கடும் அவதி!
சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் இன்று திடீரென தாமதமாக புறப்பட்டன. ஒவ்வொரு விமானமும் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானதால் விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சிலர் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்தனர்.

இந்த தாமதம் நிர்வாக காரணங்களால் ஏற்பட்டதாக ஏர் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லை என்பதே உண்மையான காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திட்டமிட்ட நேரத்தில் விமானங்கள் இயக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

திடீர் தாமதம் காரணமாக பல பயணிகளின் பயணத் திட்டம் பாதிக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு இணைப்பு விமானங்களை தவறவிட்டவர்களும் இருந்தனர். தொடர்ந்து ஏற்படும் இத்தகைய தாமதங்கள் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
