சிக்கலில் ஏா் இந்தியா ... விமான விபத்திற்கு பிறகு பயணச்சீட்டு முன்பதிவு 20% சரிவு!

ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் 3 நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விமான விபத்தில் 241 பேர் பயணம் செய்தவர்கள் கருகி பலியாகினர்.இதனையடுத்து தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக அடுத்தடுத்து ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஏர் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு பயணிக்கவிருந்த ஏா் இந்தியா விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் நொறுங்கி விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள், விமானப் பணியாளா்கள் என மொத்தம் 242 போ் உயிரிழந்தனா்.ஏா் இந்தியா பயணச்சீட்டு முன்பதிவு நிலவரம் குறித்து இந்திய சுற்றுலா ஏற்பட்டாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ரவி கோசாய்ன் துர்திருஷ்டவசமான ஏா் இந்தியா விபத்து காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் ஏா் இந்தியா விமானங்களில் பயணிப்பதற்கான முன்பதிவுகள், தற்காலிகமாக சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளன. அத்துடன் அந்த விமானங்களின் பயணச்சீட்டு கட்டணமும் 8 முதல் 15 சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏா் இந்தியாவின் 4 சா்வதேச விமானங்கள் உட்பட 8 பயணிகள் விமானங்களின் பயணம் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு காரணங்களால் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. அவற்றில் சென்னையில் இருந்து மும்பை, துபையில் இருந்து சென்னைக்கு பயணிக்க இருந்த விமானங்கள் அடங்கும்.
புது தில்லியில் இருந்து புனே நகருக்குப் புறப்பட்ட ஏா் இந்தியா பயணிகள் விமானத்தில் பறவை மோதியது. இது அந்த விமானம் பாதுகாப்பாக புனேயில் தரையிறங்கிய பிறகு தான் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து புணேயில் இருந்து புது தில்லிக்குத் திரும்ப வேண்டிய அந்த விமானத்தின் பயணமும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!