கண்டெய்னர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்... டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!
டெல்லியில் இருந்து நியூயார்க் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், வான் எல்லை சிக்கல் காரணமாகத் திரும்பிய நிலையில், விமான நிலைய வளாகத்திலேயே விபத்தில் சிக்கியது.
இன்று காலை 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லியில் இருந்து நியூயார்க்கிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஈரான் நாட்டு வான் எல்லை திடீரென மூடப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கே திரும்பியது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்ட பின், விமானத்தை ஓடுதளத்தில் இருந்து அதற்குரிய நிறுத்தத்திற்கு இழுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு பெரிய கண்டெய்னர் மீது விமானத்தின் ஒரு பகுதி பலமாக மோதியது.

இந்த மோதலில் விமானத்தின் என்ஜின் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின் போது பயணிகள் யாரும் விமானத்தில் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், என்ஜின் சேதமடைந்ததால் அந்த விமானத்தின் அடுத்தடுத்த பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
