அடுத்தடுத்து பீதியை கிளப்பும் ஏர் இந்தியா... அமெரிக்காவிலிருந்து வந்த விமானம் நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்!

 
ஏர் இந்தியா


 
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் ஏர் இந்தியா  விமானம் வெடித்துச் சிதறியது  அதன்பிறகு  விமான பயணத்தில் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டாலும்  மக்கள் பீதி அடைகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானம்  திட்டமிட்ட நேரத்தில் புறப்பட்டது.

ஏர் இந்தியா
 
அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு பறந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில்  இரண்டு எஞ்ஜின்களில் இடது புற எஞ்ஜின் பழுதாகியிருந்ததை விமானி கண்டறிந்தார்.   சிங்கப்பூரில் இருந்து மும்பை வரும் வழியில் இந்த எஞ்ஜின் பழுதாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்திய வான்வழி எல்லைக்குள் விமானம் வந்ததால் அருகில் இருந்த விமான நிலையத்தில் விமானத்தை இறக்க விமானி முடிவு செய்தார். இதன்படி, அருகில் இருந்த கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், எஞ்ஜின் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. 
மும்பைக்குச் செல்ல வேண்டிய விமானம் திடீரென கொல்கத்தாவில்  தரையிறங்கியதால் பயணிகள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பின்னர், எஞ்ஜின் பழுது பார்க்கும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து  இன்று காலை 5.20 மணிக்கு விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிக் கொள்ளும்படி  விமானத்தின் கேப்டன் அறிவுறுத்தினார்.  

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்... ஏர் இந்தியா தலைவர்! 


பயணிகளின் பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும்  நடுவானில் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டாலும்  சாதுர்யமாக விமானத்தை கொல்கத்தாவில் இறக்கியதாகவும் விளக்கம் அளித்தார்.  இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா விமானத்தை டாடா நிறுவனம் வாங்கியது. டாடா குழுத்தின் பொருட்கள் அனைத்தும் தரமானது என்று பெயர் பெற்று இருந்த  நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானம் விபத்து,  தொழில்நுட்ப கோளாறில் சிக்குவதால்  பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது