ஒரே மாதத்தில் 2வது முறையாக விமான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு... ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக ஜெட் விமான எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. நாளை முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கட்டண உயர்வு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு விமான எரிபொருள் விலையை 25 சதவீதம் வரை உயர்த்தி வரம்பு நிர்ணயித்துள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் பயணத் தூரத்திற்கு ஏற்ப கூடுதல் எரிபொருள் கட்டணத்தை (Fuel Surcharge) வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, 500 கிலோமீட்டர் வரையிலான குறுகிய தூரப் பயணங்களுக்கு 299 ரூபாயும், 2,000 கிலோமீட்டருக்கு மேலான நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிகபட்சமாக 899 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த கூடுதல் கட்டணம் ஏற்கனவே உள்ள டிக்கெட் விலையுடன் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் சூழலால் விமான போக்குவரத்துத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை காலம் நெருங்கி வரும் வேளையில், விமான டிக்கெட் விலை உயர்த்தப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளையும், வெளியூர் செல்லும் பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏர் இந்தியாவைத் தொடர்ந்து மற்ற தனியார் விமான நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதால் வான்வழிப் பயணம் இனி கூடுதல் சுமையாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
