நடுவானில் புகைப்பிடித்து,கத்தி கூச்சலிட்டு விமான பயணி அட்டகாசம்!!

 
புகைப்பிடித்தல்

சமீபகாலமாக விமானப் பயணங்களில் பெரும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது கதவை திறக்க முயற்சி, போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம், பயணிகளை விடுத்து லக்கேஜ்களை மட்டும் ஏற்றி சென்ற விமானம், பாதி பயணிகளை மட்டும் ஏற்றி கொண்டு மீதி பேரை ஏற்றாமலேயே சென்ற விமானம் என அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதே போல் ஒரு சம்பவம் ஏர் இந்தியாவில் மீண்டும் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

அதன்படி லண்டலினிருந்து மும்பை வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் பயணம் செய்த 37 வயதான ரமாகாந்த் என அமெரிக்க பயணி ஒருவர் சக பயணிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், விமானத்தில் புகைபிடித்த குற்றத்திற்காகவும் மும்பை சாகர்  காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து  ஏர்-இந்தியா விமான ஊழியர்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”விமானத்தில் புகை பிடிக்கக் கூடாது, ஆனால் அவர் கழிவறைக்கு சென்றதும் அலாரம் அடிக்கத் தொடங்கியது, நாங்கள் அனைவரும் அங்கே  நோக்கி ஓடியபோது, ​​அவர் கையில் சிகரெட் இருப்பதைக் கண்டோம், நாங்கள் உடனடியாக அவர் கையிலிருந்து சிகரெட்டை பறித்து அணைத்தோம்.

விசா சுற்றுலா விமானம்

அதன் பிறகு அவர் திடீரென பயங்கரமாக கத்த தொடங்கினார். இதனால் சகபயணிகள் அவதிக்குள்ளாகினர். விமான குழுவினர் அனைவரையும் வரவழைத்து எப்படியோ அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்றோம்.ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றார்.அவரது நடத்தையால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர்.  விமானத்தில் அவரது இருக்கையிலேயே  அவரது கைகளையும் கால்களையும் கட்டி  தான்  உட்கார வைத்தோம் . விமானம் தரையிறங்கிய பின்னர்  அவரை  மும்பை சாகர் நகர காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் எனத் தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web