₹1950-க்கு விமானப் பயணம்… புத்தாண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சூப்பர் சலுகை!

 
ஏர் இந்தியா விமானம்

வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து கைகாட்டிய நாட்கள் போய், அதிலேயே பறக்கும் வாய்ப்பு வந்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழித்தடங்களுக்கு மாதாந்திர ‘பேடே சேல்’ சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

இந்த சலுகையின் கீழ், உள்நாட்டு விமானங்களில் ரூ.1,950 முதல், வெளிநாட்டு விமானங்களில் ரூ.5,590 வரை டிக்கெட்டுகள் கிடைக்கும். டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை இணையதளம், மொபைல் ஆப் மற்றும் முன்பதிவு மையங்களில் டிக்கெட் பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை 2026 ஜனவரி 12 முதல் அக்டோபர் 10 வரை உள்நாட்டிலும், டிசம்பர் 31 வரை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாம்.

ஏர் இந்தியா விமானம்

மொபைல் ஆப்பில் முன்பதிவு செய்தால் சர்வீஸ் சார்ஜ் இல்லை. நெட் பேங்கிங் பணப்பரிவர்த்தனைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ‘லைட் ஃபேர்’ என்ற புதிய கட்டண முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், மூத்த குடிமக்கள், ராணுவத்தினர் மற்றும் லாயல்டி உறுப்பினர்களுக்கும் தனிச்சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!