இன்று முதல் திருச்சி - சென்னைக்கு 'ஏர்பஸ்' சேவை - தினமும் இருமுறை இயக்கம்; 180 பேர் பயணிக்கலாம்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குச் செல்லும் விமான சேவைகளில் இண்டிகோ நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக் காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், இன்று (டிசம்பர் 16) முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை, அதிகப் பயணிகள் பயணிக்கக்கூடிய 'ஏர்பஸ்' (Airbus) விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை விமான சேவை வழங்கப்பட உள்ளது.

தற்போதுத் திருச்சியிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ஏ.டி.ஆர். (ATR) ரக விமானங்களில் 76 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஏர்பஸ்' விமானங்களில் 180 பேர் வரை பயணிக்கலாம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக இருக்கை வசதி கொண்ட இந்த விமான சேவை, விடுமுறைக் காலப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து சென்னைக்கு வழக்கமாக தினமும் 6 முறை (காலை 7.35, 10.35, பிற்பகல் 12.40, 2.55, இரவு 7.45, 10.15 மணி) ஏ.டி.ஆர். ரக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தச் சேவைகளில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்று (டிசம்பர் 16) முதல் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை, இண்டிகோ நிறுவனம் 'ஏர்பஸ்' விமானங்களைக்கொண்டு காலை 10.35 மணி மற்றும் மாலை 5.55 மணி என ஒரு நாளைக்கு இரண்டு சேவைகள் மட்டுமே இயக்க உள்ளது. இந்தச் சேவையைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கான மற்ற ஏ.டி.ஆர். ரக விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
