மியான்மரில் டீக்கடை மீது விமான தாக்குதல்… 18 பேர் பலி!

 
மியான்மர்
 

மியான்மரின் சகாயிங் மாகாணத்தில் ராணுவ படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021ல் ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கவிழ்த்ததற்கு பிறகு, நாட்டில் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. ஜனநாயக ஆதரவு படைகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சகாயிங் மாகாணம் மாயகன் கிராமத்தில் உள்ள டீக்கடையின் மீது டிசம்பர் 5ம் தேதி விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு மியான்மர்–பிலிப்பின்ஸ் கால்பந்து போட்டியை பார்க்க சிறுவர்கள் உள்ளிட்ட பலர் திரண்டிருந்தனர். தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாக்குதல் குறித்து மியான்மர் ராணுவம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு பல குடும்பங்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!