ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய படம்... பான் இந்தியா வெளியீடு!

 
aiswarya

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமர உள்ளார். இவர் இயக்கிய வை ராஜா வை மற்றும் லால் சலாம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. குறிப்பாக ‘லால் சலாம்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், புதிய முயற்சியுடன் அவர் திரும்புகிறார்.

ஐஸ்வர்யா

இந்நிலையில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கதைக்களம் மற்றும் நடிகர் பட்டியல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 நடிகர்   ரஜினிகாந்த்

மேலும், இந்த படம் பான் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான திட்டமாக இது பார்க்கப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!