ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலில் புதுப்பட கதையுடன் சாமி தரிசனம்!

 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

 தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக சமீபகாலமாக தம்மை நிலைநிறுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள்.  முதலில்  தமிழில் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இப்படம் நல்லவரவேற்பை பெற்ற நிலையில்  அதனை தொடர்ந்து இவர் 'வை ராஜா வை மற்றும் லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கி பெரும் குறிப்பிடத்தக்க இயக்குனராக தம்மை செதுக்கி வருகிறார். அதிலும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார்.  அப்போது தான் இயக்க உள்ள புதிய படத்தின் கதையை முருகன் திருவடியில் வைத்து சாமி தரிசனம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?