அஜய் குமார் யுபிஎஸ்சி தலைவராக நியமனம்!
இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 316(1) இன் கீழ் அஜய் குமாரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய சுகாதார செயலாளரும் 1983ல் குடிமைப் பணி அதிகாரியுமான ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 1985ம் ஆண்டு கேரள கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
கேரள மாநிலத்தில் ஐடி, மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகம் செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், 2019 ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 2022 அக்டோபர் 31 ஆம் தேதி வரை பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்துள்ளார். யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமாரின் பதவிக்காலம், அவர் யுபிஎஸ்சி தலைவராகப் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
