ஐசிசி தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் !! ரசிகர்கள் உற்சாகம்!!

 
அஜீத் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர்  சேத்தன் சர்மா. இவர்  தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேசனில் சிக்கியதில் சர்ச்சைகள் உருவானதால்  பிசிசிஐ தனிவிசாரணை நடத்த  முடிவு செய்தது. அந்த சமயத்தில்  தானாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்தார். இதனால்  பிப்ரவரி 17ம் தேதி முதல் இந்திய அணிக்கான தேர்வு குழு தலைவர் பதவிக்கு இடைக்கால  சிவசுந்தர் தாஸ் செயல்பட்டு வந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை கூட சிவசுந்தர் தாஸ் தலைமையிலான தேர்வு குழுவே தேர்வு செய்தது.  

அஜீத் அகர்கர்

இந்நிலையில் தேர்வு குழு தலைவருக்கான இடத்தை நிரப்பும் பணி குறித்த ஆலோசனையில்  பிசிசிஐ ஈடுபட்டது. அதில்  இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தேர்வு குழு தலைவராக செயல்பட அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சுலக்‌ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர் ஒருமனதாக முன்னாள் வீரர் அஜித் அகார்கரைத் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்து உள்ளனர். ஆல்ரவுண்டரான அகார்கர், இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதத்துடன் 571 ரன்கள் எடுத்துள்ளார். 58 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அகார்கர், 1269 ரன்களையும் 288 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 4 டி20 போட்டிகளில் விளையாடி ரன்களையும் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
 அஜீத் அகர்கர்
ஐபிஎல்லைப் பொறுத்தவரை 42 போட்டிகளில் விளையாடி 179 ரன்களையும் 29 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளராக அகார்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற இந்திய அணியிலும் அகார்கர் இடம்பிடித்திருந்தார். 2000-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 21 பந்துகளில் அதிவேக அரைசதம் கண்டது இவருடைய சாதனையாக உள்ளது.
இந்நிலையில் அஜித் அகர்கருக்கான சம்பளமும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, ரூ.3 கோடியாக பிசிசிஐ அஜித் அகர்கருக்கு வழங்க முன் வந்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 
From around the web