அஜித் பவார் மறைவு… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த திடீர் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அஜித் பவார் அரசியல் எல்லைகளைத் தாண்டி மக்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என பிரதமர் நினைவுகூர்ந்தார். உண்மையான மக்கள் தலைவராக இருந்து, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக கடினமாக உழைத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களில் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது என குறிப்பிட்டார். விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு தைரியமும் வலிமையும் கிடைக்க பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
