அஜீத் பவாரின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைப்பு!
மகாராஷ்டிரத்தில் விமான விபத்தில் பலியான மாநில துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி, இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும், குடும்பத்தினரும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இதனால் அந்த பகுதியில் உணர்ச்சி மிகுந்த சூழல் நிலவியது.

ஜனவரி 28ஆம் தேதி மும்பையிலிருந்து அஜீத் பவார் பயணம் செய்த தனியார் விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பு தரையில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் அஜீத் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்த அஜீத் பவாரின் இறுதிச்சடங்குகள் மறுநாளே பாராமதியில் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாநில துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுநேத்ரா பவார் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
