அஜித் பவாரின் அஸ்தி கரைப்பு: கண்ணீர் மல்க விடைகொடுத்த பாராமதி!

 
பவார் பவார்

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் அஸ்தி, நேற்று அவரது சொந்த ஊரான பாராமதி அருகே உள்ள புனித நதி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. அஜித் பவாரின் மகன்கள் பார்த் பவார் மற்றும் ஜெய் பவார் ஆகியோர் தகனம் செய்யப்பட்ட இடத்திலிருந்து அஸ்தியைச் சேகரித்தனர். பின்னர் பாராமதி அருகே உள்ள நீரா மற்றும் கர்கா நதிகள் சங்கமிக்கும் இடத்திற்குச் சிறிய படகு மூலம் அஸ்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கு மூத்த மகன் பார்த் பவார் முறைப்படி அஸ்தியைக் கரைத்தார்.

சுனேத்ரா சுநேத்ரா

இந்த நிகழ்வில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவர் சரத் பவார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அஜித் பவாரின் மருமகனும் எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் நெகிழச் செய்துள்ளது: "அஜித் தாதா எந்த மண்ணில் வளர்ச்சியை விதைத்தாரோ, அதே மண்ணில் அவரது அஸ்தியைச் சேகரிப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அஸ்தியைச் சேகரிக்கும் போது, அவர் திடீரென எழுந்து வந்து 'ஏன் அழுகிறீர்கள்? மக்களுக்காக வேலை பாருங்கள்' என்று தனது கம்பீரமான குரலில் சொல்வது போலவே எனக்குத் தோன்றியது" என்று பதிவிட்டிருந்தார்.

அஜித் பவார் மனைவி சுநேத்ரா

அஜித் பவாரின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று மாலை மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். மும்பை ராஜ் பவனில் ஆளுநர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற வரலாற்றைச் சுனேத்ரா பவார் படைக்கிறார். சரத் பவார் தலைமையிலான ஆலோசனையின்படி, கட்சியின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து குறித்து சிஐடி போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான 'Learjet 45' விமானத்தின் கருப்புப் பெட்டி (Black Box) ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!