விமான விபத்தில் அஜித் பவார் பலி… மகாராஷ்டிரா முழுவதும் 3 நாட்கள் துக்கம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவால் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகம் நிலவுகிறது. இதையடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

அஜித் பவார் கடின உழைப்பாளியான தலைவர் என்றும், எந்த சூழலிலும் தைரியம் இழக்காதவர் என்றும் முதல்வர் புகழாரம் சூட்டினார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது என்றும், அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் தனக்கு பேரிழப்பு என்றும் கூறினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஜித் பவாரின் உடல் பாராமதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது மனைவி சுனித்ரா பவார், மகன் பார்த்தா பவார், சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பாராமதிக்கு விரைந்துள்ளனர். நீண்ட காலமாக துணை முதல்வராக பணியாற்றிய அஜித் பவாரின் மறைவு, மகாராஷ்டிர அரசியலில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
