நடிகர் அஜித்தை வம்பிழுக்கும் பிரபல இயக்குநர்!

 
அஜித் அல்போன்ஸ் புத்திரன்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், நடிகர் அஜித்தை வம்பிழுக்கும் விதமாக இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அந்த பதிவை தற்போது நீக்கியிருக்கிறார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரக் கூடியவர் நடிகர் அஜித். கடந்த சில வருடங்களாகவே சினிமா விழாக்களிலும் பொது விழாக்களில் எதுவும் கலந்து கொள்ளாமல் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித் அல்போன்ஸ் புத்திரன்

மேலும், அவருக்கு விருப்பமான பைக் பயணம், விமானம் முதலியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் பயணம் செய்தவர், தற்போது நடித்து வரக்கூடிய ’விடாமுயற்சி’ படத்தை முடித்துவிட்டு உலக டூர் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தான் நடிகர் அஜித் அரசியலுக்கும் வரப்போகிறார் என ’பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில் அவர், 'நான் சாரிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நிவின் பாலியும் சுரேஷ் சந்திராவும் நீங்கள் அரசியலுக்கு வர உள்ளதாக கூறியதை கேட்டேன். எப்போது என்றால் ’பிரேமம்’ படத்தில் நிவின் நடிப்பை கண்டு ரசித்த உங்கள் மகள் அனோஷ்காவுக்காக நிவினை வீட்டிற்கு அழைத்து பேசினீர்களே அப்போது! ஆனால், இதுவரை உங்களை எந்த அரசியல் கட்சிகளிலும் பார்க்கவில்லை.

அஜித்

அப்படி எனில் அவர்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள், இல்லை நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? இல்லை எனில் வேறு யாரோ உங்களுக்கு எதிராக இருக்கிறார்களா? இது மூன்றும் இல்லை என்றால் எனக்கு கடிதம் வாயிலாக நீங்கள் பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், நான் உங்களை நம்புகிறேன். பொதுமக்களும் நம்புகிறார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டும் இல்லாமல் முன்பு விஜயகாந்தை யார் கொலை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என உதயநிதியை டேக் செய்த அவர் பதிவு செய்திருந்ததும் அதிர்வலைகளை கிளப்பியது. அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதள பக்கங்களை யாராவது முடக்கி விட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web