அஜித்குமார் மரணம் காவல் மரணம் என சிபிஐ உறுதி… பொய் புகார் பின்னணி அதிர்ச்சி தகவல்!
விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் அவரது மரணம் காவல் மரணம் என சிபிஐ உறுதிப்படுத்தியுள்ளது. நகை திருட்டு புகார் அளித்த நிகிதா கூறிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அஜித்குமாரை காவல்துறையினரே தாக்கியதாகவும் சிபிஐ தனது பதிலில் கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் டிஎஸ்பி உத்தரவின் பேரில் காவலர்கள் அஜித்குமாரை விசாரித்த போது தாக்குதல் நடந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதில் டிஎஸ்பி உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காவலர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக சிபிஐ பதில் அளித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை காவலர்கள் சிறையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
