அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி - சி.பி.ஐ பிடியில் சிக்குவாரா?

 
நிகிதா அஜித்குமார்

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சி.பி.ஐ (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

முன்ஜாமீன் கோரி டி.எஸ்.பி சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "குற்றச்சாட்டுக்குள்ளான டி.எஸ்.பி-யை சி.பி.ஐ ஏன் இன்னும் கைது செய்யவில்லை?" என அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற காவலர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காத நிலையில், முக்கியப் பொறுப்பில் உள்ள டி.எஸ்.பி-க்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையைப் பாதிக்கும் என வாதிட்டனர்.

நிகிதா

நீதிமன்றத்தின் கடும் போக்கை உணர்ந்த டி.எஸ்.பி தரப்பு வழக்கறிஞர், ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், ஒரு திருட்டு வழக்கு தொடர்பாகக் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லாக்-அப்பில் (Lock-up) வைத்து அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இது 'போலீஸ் லாக்-அப் மரணம்' எனப் பெரிய அளவில் சர்ச்சையானது.

தமிழகக் காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, அஜித்குமாரின் குடும்பத்தினர் கோரியதால் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. தற்போது டி.எஸ்.பி சண்முகசுந்தரம் இதில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!