மொட்டை பாஸாக மாறிய அஜித் ... வைரலாகும் AKவின் நியூ க்ளிக்!

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். அவர் நடிப்பில் திரைக்கு வந்த விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து குட் பேட் அக்லி ஏப்ரல் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் ஏகே 64. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
AK at Spa Francochamps circuit, Belgium preparing for the 3rd round of GT4 European series coming weekend#ajithkumar #ajithkumarracing #akracing #GT4 #europeanseries #weekendracing #racing pic.twitter.com/nXksEJZUdc
— Ajithkumar Racing (@Akracingoffl) June 24, 2025
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் பிசியாக இருக்கிறார். இந்த ஆண்டு அவர் இதுவரை மூன்று கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த பந்தயத்திலுமே அஜித்தின் அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் ஐரோப்பாவில் நடைபெற உள்ள GT4 கார் பந்தயத்தின் 3வது சுற்றில் கலந்து கொள்வதற்காக தற்போது தயாராகி வருகிறார் அஜித். இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அஜித் அங்குள்ள ஸ்பா பிராங்கோசாம்ப்ஸ் சர்க்யூட்டில் பயிற்சி மேற்கொண்டார்.
அவர் பயிற்சிக்கு வந்தபோது எடுத்த வீடியோ அவெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் நடிகர் அஜித்தின் லுக்கை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வீடியோவில் மொட்டைத்தலையுடன் காட்சியளிக்கிறார் அஜித். இதைப்பார்த்த ரசிகர்கள், ஒருவேளை இது ஏகே 64 படத்தின் லுக்காக இருக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் அஜித் கடைசியாக வேதாளம் படத்தில் மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!