மாஸ் வீடியோ... தல அஜீத் மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம்!

 
ajith ajith
 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்ல, சர்வதேச தரத்தில் கார் பந்தய வீரராகவும் திகழும் நடிகர் அஜித்குமார், தற்போது ரேசிங் உலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு, தனது ரேசிங் ஆர்வத்தை மேலும் உயர்த்தி, ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனிப்பட்ட ரேசிங் அணியை உருவாக்கிய அவர், துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கார் பந்தயங்களில் பங்கேற்று பல விருதுகளை கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் அவரது ரேசிங் அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, அஜித் அடுத்த சாதனையை நோக்கி மலேசியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் பங்கேற்க தற்போது அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது பத்துமலை முருகன் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

மேலும், பத்துமலை முருகன் கோவில் என்பது அஜித்தின் ‘பில்லா’ படத்தில் இடம்பெற்ற “சேவல் கொடி பறக்குதடா” பாடல் படமாக்கப்பட்ட பிரபல இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித்தின் புதிய ரேசிங் சாதனைகளுக்காக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!