தற்கொலை முயற்சிக்குப் பின் மீண்டு வந்த அஜிதா...ட்விட்டரில் போட்ட அதிரடி பதிவு!
கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் விமர்சனங்களால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற த.வெ.க. நிர்வாகி அஜிதா ஆக்னல், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியதும் தனது அரசியல் களப்பணியைத் தொடரப்போவதாக உறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகியான அஜிதா ஆக்னலை, சிலர் "திமுக-வின் கைக்கூலி" என்று விமர்சித்ததாகவும், கட்சியில் அவருக்கு உரிய பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஜிதா, கடந்த டிசம்பர் 25-ம் தேதி அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அனைவருக்கும் வணக்கம் 🙏🏻
— Ajitha Agnel (@AjithaAgnel14) December 29, 2025
கழகத் தோழர்கள் என் மீது கொண்ட பேரன்பினாலும் பிரார்த்தனைகளாலும் மட்டுமே பூரண குணமடைந்துள்ளேன். 2026-ல் தளபதியாரை முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன்...#வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு@BussyAnand @AadhavArjuna…
தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவரது உடல்நிலை சீரடைந்ததையடுத்து, நேற்று அவர் வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய கையோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அஜிதா, "அனைவருக்கும் வணக்கம். கழகத் தோழர்கள் என் மீது கொண்ட பேரன்பினாலும் பிரார்த்தனைகளாலும் மட்டுமே பூரண குணமடைந்துள்ளேன். 2026-ல் தளபதியாரை (விஜய்) முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன். #வெற்றிப்_பேரணியில்_தமிழ்நாடு"

தற்கொலை முயற்சி போன்ற விபரீத முடிவுகளில் இருந்து மீண்டு வந்துள்ள அஜிதா, தனது இலக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த பதிவு த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
