நாளை அட்சய திரிதியை!! செல்வம் பெருக இதை செய்ய மறக்காதீங்க!!

 
இன்று அட்சய திருதியை இதை வாங்க மறக்காதீங்க!

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் பெருகும் என்பது நகை வியாபாரிகளின் வியாபார தந்திரம். இருந்தாலும் இந்த நாளில் தங்கம் மட்டுமல்ல புதிதாக என்ன தொடங்கினாலும் மேன்மேலும் பெருகும் என்பது தான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. இந்த நாளில் விரதம் இருந்து கடவுள் வழிபாடு செய்து பேறு பெற்றவர்கள் பலர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்த மூன்றாவது நாள் திருதியை திதி அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை தினத்தில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது. இதே நாளில் தான் திருமால் மகாலட்சுமிக்கு தம் மார்பில் நித்திய வாசம் செய்ய   இடமளித்தார். அத்துடன் இதே நாளில்தான் செல்வத்தின் அதிபதிகளான ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு லட்சுமிகளும் அஷ்ட லட்சுமிகளும் தோன்றிய தினம். இந்நன்னாளில் பொன், பொருள் வாங்கினால் அது மேலும் மேலும் வளர்ந்து செழிக்கும்.

அட்சய திருதியை

அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.இந்த நாளில் தங்கம் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியை அன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை என மங்கலகரமான பொருட்கள் எதுவேண்டுமானாலும்  வாங்கலாம்.

அட்சய திருதியை
தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால்  வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. அட்சய திருதியை நாளை  ஏப்ரல் 22 சனிக்கிழமை குரு ஓரையில் அதாவது காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையிலும் , சுக்கிர ஓரை காலமான காலை 10-11, மாலை 5-6 மணி வரையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம்.
 அதே போல் சித்திரை 10 ஏப்ரல் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பின்னர் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம், வெள்ளி , மங்கலப் பொருட்கள் வாங்கலாம். 

அட்சயதிருதியை என்பது  வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும். 

என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள்?! 


தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். 
ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.
 குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும். 
மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம். 
வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம். 
பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம். 
சந்தனத்தை தானமாக வழங்கினால்  ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். 
இந்நாளில்  குலதெய்வத்தை பிரார்த்தித்து , இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web