அரசு கட்டிடத்தைச் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்திய அவலம்.. வட்டாட்சியர் ஆய்வில் வெளியான ரகசியம்! கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி அராஜகம்!

 
திருச்சி அராஜகம்

சமயபுரம் அருகே 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் 5 குடும்பத்தினர் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக தங்கள் சமூகத்திற்கு மட்டும் இடம் சொந்தம் என அரசு முத்திரை பதித்த பேனர் வைத்து அரசு கட்டிடத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்ட விவகாரம் -  வட்டாட்சியர், டிஎஸ்பி திடீர் ஆய்வில் அம்பலம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறாத்தாக்குடி பகுதியில் பல்வேறு மதத்தினர், பல்வேறு சமூகத்தினர் என 150 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதில் புறத்தாக்குடியில் பல்வேறு பகுதிகளில் ஒரே சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்புடன் அதே சமூகத்தை சேர்ந்த 5 குடும்பத்தினர்  மட்டும் தங்கள் சமூகத்திற்கு மட்டும் தான் இடம் சொந்தம் என தமிழக அரசு முத்திரை பதித்த பேனர்களை 10க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து, பேனர்களின்  கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் உத்தரவு என்ற அறிவிப்புடன் சட்டத்திற்கு புறம்பாக நட்டு வைத்துள்ளனர்.

திருச்சி அராஜகம்

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி சராக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம்,  மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகனை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்த பின் திடீரென புறாத்தாக்குடி பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு இடங்களில் செந்தில், ஆசைத்தம்பி, வேல்முருகன், சின்னச்சாமி, சுரேஷ் ஆகியோர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்  சட்டத்திற்கு புறம்பாக அரசு முத்திரை மட்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக கடந்த 3 வருடமாக  பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் அண்ணாநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் விசாரித்த போது கிராமப்புற கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மதிப்பீட்டில் சுய உதவி குழுவிற்கென கட்டிடத்தை கட்டி உள்ளனர்.

திருச்சி அராஜகம்

இந்தக் கட்டிடத்தை ஐந்து பேர் மட்டும் அவர்கள் குடும்பத்தினருக்கு பயன்பாட்டுக்கு வைத்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் விசாரித்த போது ஒரே சமூகத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் அவர்கள் சொந்த பயன்பாட்டுக்காக சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வந்தனர் என்பது தெரிய வந்ததையடுத்து அப்பகுதி மக்களின் புகார் மனுவை பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் எனவும், 5 பேர் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வருகின்றனர் இதனை மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web