ஜன.17ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு... அமைச்சர் மூர்த்தி தகவல்!

 
ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்த ஆண்டு போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்த உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டு

ஜனவரி 15: அவனியாபுரம், ஜனவரி 16: பாலமேடு, ஜனவரி 17: அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, போட்டிகள் எவ்விதப் புகாருக்கும் இடமின்றி வெளிப்படையாக நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படியே ஜல்லிக்கட்டு நடத்தப்படும். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவுகள் ஆன்லைன் மூலமே நடைபெறும். தகுதியுள்ள வீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்படுவர். எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் பாகுபாடு காட்டாமல், அரசு ஆணைக்கு உட்பட்டு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விழா நடத்தப்படும்.

ஜல்லிக்கட்டு

பார்வையாளர்களுக்கான கேலரி வசதி, காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் வீரர்களுக்கான அவசரச் சிகிச்சை வசதிகள் உலகத்தரம் வாய்ந்த முறையில் அமைக்கப்படும். மதுரையின் வீர விளையாட்டைப் பெருமைப்படுத்தும் விதமாக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய இருவரையும் விழாவில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முறைப்படி அழைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!