அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கு கார் பரிசு - சிறந்த காளைக்கு டிராக்டர்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரையின் முத்திரை அடையாளமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 17) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, களத்தில் சீறி வந்த 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அபி சித்தர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவருக்குப் புதிய பைக் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. 11 காளைகளைப் பிடித்த பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மூன்றாம் இடத்தைப் பிடித்து, இ-பைக் (E-Bike) பரிசை வென்றார்.

போட்டியில் வீரர்களிடம் பிடிபடாமல் மாஸாக விளையாடிய சிறந்த காளையின் உரிமையாளருக்குத் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்ற பல காளைகளின் உரிமையாளர்களுக்குத் தங்கக் காசுகள், பீரோ, கட்டில் போன்ற எண்ணற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
