அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல்வர் வருகை.. ட்ரோன்கள் பறக்கத் தடை.. பாதுகாப்பு வளையத்தில் மதுரை!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை செல்கிறார். இதையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகள் மற்றும் முதல்வர் பயணிக்கும் வழித்தடங்கள் ஆகிய இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்ட கலெக்டர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தடையை மீறி ட்ரோன்களைப் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.காரணம்: வி.வி.ஐ.பி பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, முதல்வர் போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் வான்வழிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது வழக்கம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
