உஷார்... தொண்டையில் மட்டன் துண்டு சிக்கி 13 வயது சிறுமி மரணம்!

 
சிறுமி இறைச்சி சிக்கி மரணம்

ஈரோடு மாவட்டத்தில், நேற்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் அமர்ந்து ஆட்டிறைச்சி சாப்பிட்டுக் கொண்டிருந்த 7ம் வகுப்பு சிறுமி, தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் வர்ஷினி (13).  அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்த வர்ஷினி, நேற்று குடும்பத்தினருடன் அமர்ந்து ஒன்றாக ஆட்டிறைச்சி சாப்பிட்டு உள்ளார். அப்போது வர்ஷினியின் தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கி உள்ளது. இதனால் வர்ஷினிக்கு சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

உடனடியாக வர்ஷினியை, அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வர்ஷினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே சிறுமி வர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மறுப்பதாக கூறி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web